திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (12:19 IST)

தக் லைஃப் துரைமுருகன் சட்டசபையில் கண்ணீர் - ஏன் தெரியுமா ?

திமுக வின் மூத்த தலைவரும்  பொருளாலருமான துரைமுருகன் இன்று சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்த இரங்கல் தீர்மானத்தின் பொது கண்ணீர் விட்டு அழுதார்.

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையோடு தொடங்கியது தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவை 8 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து இரண்டாவது நாளாக இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்  வாசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனால் இன்று சட்டப்பேரவைத் தொடங்கியதும் கருணாநிதியின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். தொடர்ந்து பேசிய அவர் ‘கருணாநிதியின் அழகுத் தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அரசியல் எல்லையைக் கடந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்’ எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து கருணாநிதி குறித்து பேசிய திமுக பொருளாலர் துரை முருகன் , கருணாநிதிக்கும் அவருக்கும் இருந்த நட்பின் நெருக்கம் மற்றும் தன் உடல்நிலை மீது கருணாநிதிக் கொண்டிருந்த அக்கறைப் பற்ரி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவசப்பட்ட துறைமுருகண் கண்னீர் விட்டு கலங்கினார். அதைப் பார்த்த ஸ்டாலின்  அவரின் கையைப் பிடித்து சமாதானப்படுத்தி அமரவைத்தார்.

நக்கலானப் பேசுக்களுக்கு சொந்தக்காரரான துரைமுருகன் சமூக வலைதளங்களில் பரவலான ரசிகர்களுக்கு சொந்தக்காரர். அவரது பேச்சுகளும் வீடியோக்களும் அதிகளவில் பார்க்கப்படு அவ்ருக்கு தக்லைப் என்ற செல்லப்பெயரும் உண்டு. அப்படிப்பட்ட கண்ணீர்விட்ட சம்பவம் சட்டசபியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.