திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (15:42 IST)

ஆடியோ விவகாரத்திற்காக வழக்கு இல்லை.. அது பிடிஆரின் தனிப்பட்ட பிரச்சனை: திமுக

பிடிஆரின் ஆடியோ விவகாரத்திற்காக திமுக வழக்கு தொடுக்காது என்றும் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை என்றும் திமுக தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறிய போது ஆடியோ விவகாரம் பிடிஆரின் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வழக்கு தொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஆடியோ போலியானது என ஏற்கனவே பிடிஆர்  விளக்கம் அளித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பிடிஆர்  பேசியதாக வெளியான வீடியோவில் முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறியிருந்தது 
 
அந்த ஆடியோ தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திமுகவின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ஆடியோ விவகாரம் தொடர்பாக பிடிஆர் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva