வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:39 IST)

வணக்கமே மரியாதையானது காலில் விழுவது அல்ல: நெகிழ வைக்கும் ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி மரணம்டைந்ததால், செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேர்தலில் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 
 
ஸ்டாலின் செயல் தலைவராக படவியேற்ற போதே கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது காலில் விழுந்து வாழ்த்து பெறுவதை தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். 
 
இந்நிலையில், திமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப வணக்கம் செல்லுவதே தலைமைக்கு தரும் மரியாதை என்பதை அப்போதே குறிப்பிட்டிருந்தார். 
 
தற்போது அவர் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க பலரும், ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தலைமைக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
 
கழக தலைவரை காணவரும்போது பரிசளிக்க விரும்புவோர், ஆடம்பரம் மிகுந்த சால்வைகள், மாலைகளைத் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்கு துணை நிற்கும் புத்த்கங்கலை வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 
 
திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிகழ்ச்சிகளிலும் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் அதிகளவிலான பேனர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.