வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (15:41 IST)

தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர் - வைரல் புகைப்படம்

காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
இதனால், தமிழகமெங்கும்  கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தென. எனவே அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த பேருந்துகள் மட்டும் இன்று தமிழகத்தில் ஓடின. ஆனால், அப்படி ஓடும் பேருந்துகளை திமுக கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில், வேலூரில் திமுகவினர் சாலை மறியல் ஈடுபட்ட போது ஒரு பெண் தொண்டர், திமுகவின் கொடியை ஏந்திய படி, அந்த சாலை வழியாக வரும் ஒரு அரசு பேருந்தை மறித்து மறியல் செய்கிறார். அவர் பெயர் தெய்வாணை என்பது தெரியவந்துள்ளது.
 
அவரின் புகைப்படத்தை திமுகவினர் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாக பகிர்ந்து  வருகின்றனர்.