கனிமொழி தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பி கனிமொழி இன்று சென்னையில் போராட்டம் நடத்த உள்ளார்
சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிரணி மகளிர் தொண்டரணி ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கனிமொழியின் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ் பி கண்ணன் ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் கனிமொழி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது