1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (10:47 IST)

கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதா? மெர்சலுக்காக பொங்கிய கனிமொழி

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு எதிராக குரல் கொடுத்த பாஜக தலைவர்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது திமுக மகளிரணி தலைவரும், மேல்சபை எம்பியுமான கனிமொழி, 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்



 
 
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, 'அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கூறினார். மேலும் கருத்து சுதந்திரத்திலும் கலையிலும் யாரும் தலையிட கூடாது' என்று அவர் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்தார்.
 
ஏற்கனவே மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உள்பட பல திமுக பிரமுகர்கள் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில் தற்போது கனிமொழியின் ஆதரவும் மெர்சல் படக்குழுவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.