செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:21 IST)

ஒரே நாளில் திமுக எம்பி மற்றும் எம்.எல்.வுக்கு கொரோனா: தொண்டர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களையும் பாதித்து வருவதாக வெளியான செய்திகளை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஒரத்தநா ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்கலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன 
 
இதேபோல் மயிலாடுதுறை திமுக எம்பி இராமலிங்கம் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று ஒரே நாளில் இரண்டு எம்பிக்கள் மற்றும் ஒரு எம்எல்ஏக்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது