திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (15:58 IST)

திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் தயார் - மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 ஆண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து தற்போது சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பது தவறானது என்று கூறியிருந்தார்.