வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (12:37 IST)

ஸ்டாலின் உத்தரவு: அமைதியான திமுக எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டசபையில் வரும் 2017-18ம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



இதற்கு முன்பு கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டசபை கூடியது. அப்போது நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் மறக்க முடியுமா? ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டு அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார். அவைத் தலைவரிடமும் எதிர்க் கட்சிகள் அநாகரிகமாக நடந்துகொண்டன. இதனால் சட்டசபையே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த சம்பவத்திற்கு பின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக திமுக கூறியது. இந்த சூழ்நிலையில் நேற்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் அனைவரும் எவ்வித ரகளையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அமைதியாகவே நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் கடந்த முறை நடந்த சம்பவத்தால் மக்கள் நம் மீது வருத்தத்தில் உள்ளனர். எனவே மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து நாம் நடந்துகொள்ளவேண்டும் என்றார்.  திமுக எம்.எல்.ஏ.க்கள் அமைதிக்கு இதுதான் காரணம் என்று தெரிகிறது.