1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (10:56 IST)

காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..!!

Pugazanthi
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71.
 
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, தலைச் சுற்றி கீழே விழுந்தால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இன்று காலை எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

 
இந்நிலையில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழேந்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.