செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (23:20 IST)

அதிமுக பிரமுகர்கள் மீது பாசம் காட்டும் திமுக அமைச்சர்

அதிமுக பிரமுகர்கள் மீது பாசம் காட்டும் திமுக அமைச்சர் ! திமுக நிர்வாகிகளுக்கு கல்தா !? விரக்தியில் திமுக நிர்வாகிகள்.
 
தமிழகத்தில் தற்போது உள்ள திமுக தலைமையிலான, திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு, அதில் கீழ் இருக்கும் அமைச்சர்கள் ஏராளமானோர் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி விட்டு கட்சி தாவி அவர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே, இதில் கரூர்  செந்தில்பாலாஜி மேலும் ஒரு கால் கோல் பதிப்பது போல, தற்போதும் அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே, அதிக அளவில் பாசம் காட்டி, தற்போதைய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் மிகுந்த அளவில் விமர்சனம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை வேகவேகமாக திமுகவில் இணைத்து வருகிறார். ஒன்றிய செயலாளர் முதல் வார்டு செயலாளர் வரை, கூட்டுறவு சங்க தலைவர் முதல் ஊராட்சி ஒன்றிய பிரமுகர் வரை என்று அப்போதைய அதிமுக ஆட்சியில் பெருமளவில் ஊழல், காவல் நிலைய வழக்குகள், தற்போதைய தமிழக முதல்வரே மிகுந்த அளவில் விமர்சனம் செய்தவர்கள் என்று ஏராளமானோரை, தான் அங்கம் வகிக்கும் திமுக கட்சிக்கு, எழுத்து வருகின்றார். இதனால் ஏற்கனவே அப்போது முதல் இப்போது வரை திமுக கட்சிக்கு மட்டுமே, விசுவாசம் காட்டிய திமுக பிரமுகர்கள் இடையே மிகுந்த சுணக்கத்தை காட்டியுள்ளது, இவரால் (செந்தில் பாலாஜி) திமுக கட்சியில் இருந்து விலகியவர்கள் மீது எந்த நாட்டமும் காட்டாமல் இன்றும் அதிமுக கட்சியினர் மீது மட்டுமே அதிக அளவில் பாசம் கொண்டவராகவும், அவர்களுக்கு தற்போது திமுக கட்சியில் பதவி தருவதற்காகவும் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில், பதவி தருவதாகவும் கூறி, வாரத்திற்கு ஒரு முறை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் தலைமையில் இணைத்து வருகின்றார் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே இவருடன் அதிமுக, அமமுக கட்சியில் பயணித்து திமுகவில் இணைந்தவர்களுக்கு கட்சிப் பதவி கொடுத்தது, இத்தனை ஆண்டுகாலம், திமுகவினரின் உண்மையான விசுவாசிகளிடையே, பெருமளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடன் வந்த இணைந்தவர்களுக்கு கட்சிப் பதவி ஒரு புறம் இருக்க, தற்போது நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு, அமைய ஏராளமான திமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தங்களுடைய உயிரையும் துச்சமென கொடுத்து பாடுபட்டவர்களிடையே, தன்னுடைய தலைவரையும், கட்சியையும் கேவலமாக விமர்சித்தவர்கள் தற்போது அதிமுகவில் இருந்து திமுகவில் அதுவும் தங்களுடைய பதவிக்காகவும் அவர்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்காகவும் திமுகவில் இணைந்து வருகின்றனர் என்கின்றனர் உண்மையான திமுகவினர்