திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (15:10 IST)

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் முக்கிய அறிவிப்பு!

duraimurugan
திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran