1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (13:45 IST)

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை!

திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் தமிழன் திமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இவர் பல்வேறு தொலைக்காட்சி பேட்டிகளில் திமுக குறித்த வாதங்களை முன்வைத்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
வீட்டில் பிணமாக எடுக்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழன் பிரசன்னாவிடம்  சென்னை கொடுங்கையூர் காவல்துறை துரித விசாரணை நடத்தி வருகின்றனர்.