புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (10:52 IST)

வெடி மருந்து கிடங்கே ஸ்டாலின்!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஒரு வெடி மருந்து கிடங்கு என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் திருமண விழாக்களில், அந்த கட்சித் தலைவர்களை புகழும் வகையில் பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டுவது வழக்கம்.

அந்த போஸ்டர்களில் அந்த தலைவர்களை “தன்மான சிங்கம்” “தமிழகத்தை காக்க வந்த தளபதியே” போன்ற வாசகங்களால் புகழ்ந்து அச்சிடப்பட்டிருக்கும்.

அந்த வரிசையில் தற்போது சென்னை வில்லிவாக்கம் அருகே, திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரின்  இல்ல திருமண விழாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டரில், திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு “வெடி மருந்து கிடங்கே” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது போன்ற அரசியல் தலைவர்களை புகழ்ந்து அச்சிடப்படும், பல வேடிக்கையான வாசகங்களை கொண்ட போஸ்டர்கள் தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் கேலி செய்து பகிரப்படுகிறது.

அந்த வரிசையில் தற்போது ஸ்டாலினின் ”வெடி மருந்து கிடங்கே” போஸ்டர், நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.