செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (16:32 IST)

அந்த பயம் இருக்கட்டும்... பச்சா பாஜகவை பங்கமாய் கலாய்த்த ஸ்டாலின்!

பெரியார் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இன்று பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 46வது நினைவு தினம் திராவிட கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக பெரியார் – மணியம்மை திருமணத்தை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.
 
பின்னர் பலரின் எதிர்ப்புக்களால் அந்த பதிவை பாஜக நீக்கியது. இந்நிலையில் இது குறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? 
 
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என பதிவிட்டுள்ளார். 
 
இதேபோல எம்பி கனிமொழியும், தந்தை பெரியார், தனி மனிதரல்ல. தமிழர்களை மீட்க வந்த தத்துவம். பெண்ணுரிமை போற்றும் சமூகம் அமைய அயராது உழைத்தவர். பெண்ணுரிமை, நாகரிகம் பற்றி அறியாதவர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம். இவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்போம்.