எல்லோருக்கும் ஒரு வேலை; எனக்கு இரண்டு வேலை: அப்படி என்ன வேலை ஸ்டாலினுக்கு?
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சியில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
அந்த மாநாட்டில் அவர் பேசியது பின்வருமாறு, ஒரு அரசாங்கம் என்பது நீதிக்கான அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். அத்தகைய நீதிக்கான அரசாங்கமாக தலைவர் கருணாநிதி தலைமையில் இருந்த திமுக அரசு விளங்கியது.
அநீதிக்கான அரசாங்கத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். தேசத்தை விற்கக்கூடிய அரசாங்கம்தான் இந்த மோடி அரசாங்கம்.
மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேலைதான். அந்த ஒரு வேலை எதுவென்று கேட்டால் மோடியை வீழ்த்துவது. ஆனால், எனக்கு இரண்டு வேலை, மோடியோடு சேர்த்து எடப்பாடி பழனிச்சாமியையும் வீழ்த்துவது.
மோடியும் எடப்பாடியும் ஒன்றாக வந்தாலும், பேசி வைத்துக்கொண்டு தனித்தனியாக வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை வீழ்த்த வேண்டும் என பேசினார்.