திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (15:37 IST)

7 அரசு பள்ளி மாணவிகளின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்ற திமுக!

7 அரசு பள்ளி மாணவிகளின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்ற திமுக!
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில மாணவ மாணவிகளுக்கு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் தனியார் கல்லூரியில் கட்டணம் கட்டுவதற்கு அவர்களுக்கு வசதி இல்லாத நிலை ஏற்பட்டது
 
இந்த நிலையில் அதிரடியாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவ மாணவிகளுக்கு திமுக உதவி செய்யும் என்று கூறினார் இதனை அடுத்து அதிரடியாக எடப்பாடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவ மாணவிகளுக்கு அரசே செலவை ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த ஏழு அரசு பள்ளி மாணவிகளின் ஐந்து வருட மருத்துவ படிப்பிற்கான முழு பொறுப்பை திமுக வர்த்தக அணி மாநில தலைவர் ஐயாத்துரை பாண்டியன் என்பவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து அந்த 7 மாணவிகளும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு நன்றியை தெரிவித்தனர்