வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (12:59 IST)

எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு… திமுக முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் எட்டுவழிச்சாலை மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனத் திமுக அரசு அறிவித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை திட்டம், நியுட்ரினோ திட்டம் மற்றும் மீத்தேன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மேல் அரசு சார்பாக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என நேற்று சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.