1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2017 (18:49 IST)

சபாநாயகர் தனபாலுக்கு சேலை அனுப்பிய திமுக-வினர்

தமிழக சட்டபை சபாநாயகர் தனபாலுக்கு திமுக-வினர் பொள்ளாச்சியில் இருந்து பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் திமுக கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்த கோரி அமளியில் ஈடுப்பட்டனர். இதில் சபாநாயகர் தன் சட்டையை திமுகவினர் கிழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் சட்டசையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
இதைத்தொடர்ந்து சென்னை மெரினா காந்தி சிலையில் அருகில் ஸ்டாலினுடன் திமுக கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் நேராக ஆளுநரை சந்தித்து, தாம் சட்டசபையில் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
 
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நகர திமுக-வினர், சென்னையில் உள்ள சபாநாயகருக்கு பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.