1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (03:36 IST)

சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: மு.க.ஸ்டாலின் வெளியே - கனிமொழி உள்ளே

தமிழக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்க 9 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, திமுக. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சட்டப் பேரவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 9 பேர் கொண்ட குழு நிமியக்கப்பட்டுள்ளது.  அதன் விவரம் இதோ:
 
1. டி.ஆர். பாலு - ஒருங்கிணைப்பாளர் 
 
2. கனிமொழி எம்.பி. 
 
3. பேராசிரியர் அ.இராமசாமி 
 
4. ஆர். சண்முகசுந்தரம் 
 
5. சுப்புலட்சுமி ஜெகதீசன் 
 
6. வி.பி. துரைசாமி 
 
7. என்.ஆர். இளங்கோ 
 
8. டி.கே.எஸ். இளங்கோவன் 
 
9. தங்கம் தென்னரசு, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளது. 
 
இதில், திமுகவின் தலைவர் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் உள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இந்த 9 பேர் கொண்ட குழுவில் இடம் பெறவில்லை. ஆனால், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.