வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (12:44 IST)

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம்.. தேதியை அறிவித்த துரைமுருகன்..!

duraimurugan
ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்கிறார்கள் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது, பூத் முகவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் “மாவட்டக் கழகச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் - தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்' வருகிற 01-06-2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். 
 
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் வேட்பாளர்கள் - தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran