செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:33 IST)

பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சரின் மருமகன்! – எச்.ராஜா வாழ்த்து!

சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு அரசியல் பிரபலமும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

அடுத்த ஆண்டில் தமிழகம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள சூழலில் இந்த கட்சி தாவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் மருமகன் புவியரசு என்பவரும் பாஜகவில் இணைந்துள்ளார். புவியரசு பாஜகவில் இணைந்ததற்கு பாஜக மாநில தேசிய செயலாளர் எச்.ராஜா தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாஜக பதவி ஆசை காட்டி அரசியல் பிரமுகர்களை தன் பக்கம் இழுப்பதாக திமுக வட்டாரங்கள் கூறி வந்தாலும், திமுகவில் உள்ள குடும்ப அரசியல் பிடிக்காமலே பாஜகவில் அவர்கள் இணைகிறார்கள் என பாஜக வட்டாரம் கூறி வருகிறது