புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (13:04 IST)

குடியுரிமை சட்டம்: மீண்டும் போராட்டத்தை அறிவித்த திமுக!

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டதிருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைப்பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் எல்லாம் முடிந்த பின்னர் திமுக காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒரு போராட்டத்தையும், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஒரு போராட்டமும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மீண்டும் ஒரு போராட்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையில் தோழமை கட்சியினர் வரும் 23ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பேரணியில் தோழமை கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சியினர், அனைத்து அமைப்பினர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் மத்திய அரசு சொல்வதை அடிபணிந்து ஏற்பவர் தான் முதல்வர் பழனிசாமி என்றும் அதிமுக, பாமக ஆதரவால் தான் குடியுரிமை சீர்திருத்த சட்டம் நிறைவேறியது என்றும் அதிமுக பாமகவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீர்மானத்தால் என்ன லாபம் என்பதை திமுகவினர் தான் சொல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்