செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:40 IST)

திமுகவுடன் உறவு நீடிக்கின்றதா? ஸ்டாலின் சந்திப்புக்கு பின் திருமாவளவன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிறிது நேரத்திற்கு முன் சந்தித்து பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''திமுக - விசிக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், திமுகவுடன் உறவு வலிமையாக உள்ளதாகவும் கூறினார். மேலும் ஒரு சிலர் திமுக-விசிக உறவு குறித்து வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைய பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, 'தோழமை கட்சிகள் என்பதால் கூட்டணி உருவாகாது என்பது இல்லை என்றும், திமுகவு-விசிக கூட்டணி உறுதியாக அமையும் என்றும், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களுடைய கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது குறித்து வெளிப்படையாக பேசாமல் மெளனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தற்போதைக்கு இல்லை என்றும், இந்த கட்சிகள் திமுகவின் தோழமை கட்சிகள் என்றும், தோழமை கட்சிகள் அனைத்தும் கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.