செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:16 IST)

திமுக, அதிமுக – எது பணக்காரக் கட்சி ?

பணக்கார மாநிலக் கட்சி எது என்பது தொடர்பாக நடத்திய ஆய்வு ஒன்றில் திமுக. அதிமுக ஆகியக் கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

அரசியல் கட்சிகளின் வரவு - செலவு கணக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு ஆண்டுதோறும் மாநிலக் கட்சிகளின் வரவு செலவு கணக்கு சம்மந்தமான ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன் படி பணக்கார மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான பட்டியலில் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. திமுக 191 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அதிமுக 189 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் கொண்டுள்ளது.