வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (15:16 IST)

வேலூரில் மீண்டும் அதே வேட்பாளர்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

வேலூர் தொகுதியில் வாக்குக்குப் பணம் கொடுப்பது சம்மந்தமாக நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் 10 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதிக்கானத் தேர்தலை மட்டும் நிறுத்த்யது தேர்தல் ஆணையம்.

இதனையடுத்து இப்போது அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூருக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து திமுக, அதிமுக ஆகிய இருக்கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பாக ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

நம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.