வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (15:09 IST)

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.
 
இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம்  170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். 

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.
 
இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.