1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (19:15 IST)

தேமுதிக-வின் முரசு சின்னம் ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தேமுதிக வுக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் ஆடை நிறுவன உரிமையாளர் முரளிமோகன் பொதுநலன் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "தேமுதிக கட்சிக்கு முரசு சின்னத்தை தேர்தல் சின்னமாக கடந்த 2004ல் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதை தேர்தல் சின்னமாக கருத முடியாது என்றும் முரசு என்பது ஒரு தாளவாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டார், 
 
மேலும், நான் திருப்பூரில் முரசு ஆயத்த ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதற்காக முரசு சின்னத்துடன் வணிக குறியீடு பதிவு செய்துள்ளேன். தற்போது, தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் நடத்தி வரும் தொழிலுக்கு பெரும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது, இதனால், தேமுதிக கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதை பொதுநலன் மனுவாக கருத முகாந்திரம் இல்லை. அதனால், மனுதாரருக்கு வழக்கு செலவு விதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நீதிபதிகளிடம் தெரிவித்ததை அடுத்து, நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.