திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (10:25 IST)

பீனிக்ஸ் பறவை பறந்து போயிடுச்சு: என்ன சொல்கிறார் வைகோ?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இதில் படுதோல்வியடைந்த தேமுதிக நேற்று அவர்களுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது.


 
 
சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட அனைத்த வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தனர். இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த அந்த கட்சி, மக்கள் நல கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
 
தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வலியுறுத்திய ஒரு விஷயம் மக்கள் நல கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்பதாகும்.
 
இந்நிலையில் தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாநில பொருளாளர் இளங்கோவன், வருகிற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்து, மக்கள் நல கூட்டணியுடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தேமுதிக.
 
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மக்கள் நல கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற அவர்களுக்கு உரிமை உள்ளது என்றார்.
 
மேலும், தேமுதிக உடன் மக்கள் நல கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டதாகவும், கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவது அவர்களது தனிப்பட்ட முடிவு. மக்கள் நல கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகள் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளதாக வைகோ கூறினார்.