வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (06:50 IST)

சட்டசபையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு

இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேச வாய்ப்பளிக்காததால் தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அத்துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள்.
 
இது தொடர்பாக விலைவாசி உயர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர தேமுதிக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துனர். அதற்கு அனுமதி மறுக்கபட்டது. அனுமதி மறுத்ததை கண்டித்து, சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
இதுதொடர்பாக, தேமுதிக உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால், இரண்டு வாரங்களாகியும் இதுதொடர்பாக, கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இதுகுறித்து தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று பேச முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தையடுத்து, அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.