வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (12:41 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று மறக்க முடியாத நாள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடினார். 


 
உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அங்கு அவர் தனது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து தனது திருமண நாளை கொண்டாடினார். பிரேமலதா, விஜயகாந்த்துக்கு கேக் ஊட்டி விட்டார். அவரும் மனைவிக்கு கேக் ஊட்டி விட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து தேமுதிகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் பூரணமாக குணம் அடைந்து பழைய படி கம்பீரமாக வலம் வரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.