தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!


Caston| Last Modified வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:03 IST)
தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகி கடந்த வாரம் அவர் வீடு திரும்பினார்.
 
கடந்த வாரம் வீடு திரும்பிய நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
 
இதனையடுத்து வீடடில் ஒய்வெடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :