Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திவாகரன் அதிமுகவில் இல்லை: நாஞ்சில் சம்பத் அதிரடி!

திவாகரன் அதிமுகவில் இல்லை: நாஞ்சில் சம்பத் அதிரடி!

சனி, 8 ஜூலை 2017 (15:53 IST)

Widgets Magazine

சசிகலாவின் தம்பி திவாகரன் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 
 
துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு இடையே மோதல் நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் கணவர் நடராஜன் தினகரனுக்கும், திவாகனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொண்டார்.
 
ஆனால் அதனை தான் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்ததாக கூறினார். இது குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது, நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் கிடையாது. எனவே அதனை நம்ப வேண்டாம் என கூறினார்.
 
இந்நிலையில் தினகரனுக்கு எதிராக திவாகரனை ஒரு சிலர் கொம்பு சீவி வருவதாக செய்திகள் வந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் பேச்சாளரும், தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், திவாகரன் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. தினகரனுடைய, உறவினர் என்ற முறையில் மட்டுமே அவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றார்.
 
திவாகரன் அதிமுகவிலேயே இல்லை என்பதை உணர்த்த தான் தினகரன் நாஞ்சில் சம்பத்தை பேட்டியளிக்க வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகளை உருவாக்கி சீனா உலக நாடுகளை பிரமிப்பில் ...

news

விமானம் விட்ட புகையால் சிதறிய பஸ் கண்ணாடி; பயணிகள் காயம்

டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகையால் பயணிகள் பயணித்த பஸ் ...

news

ஜிஎஸ்டி குறித்து அறிய மொபைல் ஆப் வெளியிட்ட மத்திய அரசு

ஜிஎஸ்டி குறித்த விவரங்கள் அறிய மத்திய அரசு புதிய மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது

news

உத்தரவு எஜமான்: ஸ்டாலினை நக்கலடிக்கும் எச்.ராஜா!

மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் மூலம் மாநிலங்களில் தனி ஆட்சி நடத்துவதாக ...

Widgets Magazine Widgets Magazine