ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (18:45 IST)

ஓ.பி.எஸ். சுண்டெலி, இ.பி.எஸ். யானை: திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

Dindugul
அரசியலில் ஓபிஎஸ் சுண்டெலி என்றும் இபிஎஸ் யானை என்றும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்பிட்டு பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எங்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சட்டப்படி அதிமுக கட்சி, அலுவலகம், வரவு செலவு, சின்னம் உட்பட அனைத்தும் எங்களிடம் தான் இருக்கிறது என்றும் எனவே நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றோம் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார் 
 
மேலும் ஓபிஎஸ் சுண்டெலி என்றும் இபிஎஸ் யானை என்றும் யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும் என்று எங்களோடு ஓபிஎஸ்ஐ ஒப்பிடுவதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva