வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:41 IST)

திண்டிவனத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு! – வியாபாரிகள் அதிரடி முடிவு!

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில பகுதிகளில் முழு ஊரடங்கை மேலும் சில காலம் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமையான இன்று மட்டும் மாநில அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு முழுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திண்டிவனத்திலும் இன்று முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு முழு கடையடைப்பு நடத்த வியாபாரிகள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர்.