1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (15:48 IST)

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில் ஆ ராசா துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ ராசா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இடங்களுக்கு இப்போது திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை திமுகவின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.