Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வின் வாகனத்தை பயன்படுத்திய தினகரன் - அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி


Murugan| Last Updated: சனி, 11 மார்ச் 2017 (11:15 IST)
அதிமுக சார்பில், சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள சென்ற அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மறைந்த முதவ்லர் ஜெயலலிதாவின் வாகனத்தைப் பயன்படுத்தியது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் தோழி சசிகலா, ஜெ. பயன்படுத்தி வந்த காரை பயன்படுத்தி ஜெ.விசுவாசிகள மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  அதன்பின் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, ஜெ. வின் கார் போயஸ்கார்டன் வீட்டில் நின்று கொண்டிருந்தது.


 

 
இந்நிலையில், சமீபத்தில், அதிமுக சார்பில் திருநின்றவூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை திறக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு, சிலைகளை திறந்து வைக்க வந்த தினகரன்,  ஜெ.வின் வாகனத்தில் வந்தார். இதை அங்கிருந்த சில ஜெ.வின் விசுவாசிகள் அதிர்ச்சியாக பார்த்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :