Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனைவருக்கும் நன்றி - டிவிட்டரில் முடிவுரை எழுதிய தினகரன்


Murugan| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (15:10 IST)
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்திருக்கும் வேளையில், தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 
ஆட்சியை மற்றும் அதிமுக கட்சியை காப்பாற்ற, இரட்டை இலை சின்னத்தை மீட்க என பல காரணங்களை கூறி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலுமாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு அதிரடி முடிவெடுத்தனர். மேலும், ஓ.பி.எஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நான் நேற்று இரவே கட்சியிலிருந்து விலகி விட்டேன் என தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் மூலம் இத்தனை நாள் ஆடி வந்த அரசியல் ஆட்டத்திற்கு அவர் முடிவுரை எழுதிவிட்டார் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :