1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:38 IST)

ஓபிஎஸ் அணி பூத் ஏஜெண்டுகளை விடாமல் விரட்டும் தினகரன் அணியினர்?

ஓபிஎஸ் அணி பூத் ஏஜெண்டுகளை விடாமல் விரட்டும் தினகரன் அணியினர்?

ஆர்கே நகர் தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.


 
 
தொகுதியில் டிடிவி தினகரனுக்கும் அவரது அணியினருக்கும் பலத்து எதிர்ப்பு நிலவி வருவதாகவே செய்திகள் வருகின்றன. சில இடங்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற அவரது ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
 
இந்நிலையில் எதிர்ப்பு அதிகமாகி வருவதால் ஓபிஎஸ் அணியின் பூத் ஏஜெண்டுகளை விலை கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தினகரன் தரப்பினர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
தங்கள் தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டால் கனிசமான பணம் தருவதாக ஓபிஎஸ் அணி பூத் ஏஜெண்டுகளிடம் பேரம் பேசஒப்பட்டு வருகிறது. அதற்கும் மடியாதவர்களுக்கு வாக்குறுதிகள் பலமாக அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எதற்கும் மசியாமல் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்படுவதாக ஓபிஎஸ் அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
ஓபிஎஸ் அணி பூத் ஏஜெண்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனை பார்த்து ஓபிஎஸ் அணியின் பூத் ஏஜெண்டுகள் மிரண்டு ஓடுவதாக பேசப்படுகிறது.