திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (13:18 IST)

அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு!

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்ததை அடுத்து விரைவில் பொதுக்குழு கூடி சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என நேற்று மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் கூறினார்.


 
 
இதனையடுத்து இன்று தினகரன் வைத்திலிங்கைத்தை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக வைத்திலிங்கம் நடந்து கொண்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு நீக்குவதாக தினகரன் அறிவித்துள்ளார்.
 
மேலும் தொண்டர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என தினகரன் கூறியுள்ளார். ஆனால் என்னை நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தினகரனை நாங்கள் ஏற்கனவே நீக்கிவிட்டோம் என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.