ஆட்சியை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம்: தயாராக இருக்கும் 50 எம்எல்ஏக்கள்!

ஆட்சியை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம்: தயாராக இருக்கும் 50 எம்எல்ஏக்கள்!


Caston| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (16:59 IST)
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு தினகரன் கொடுத்த கெடு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து பல அதிரடி வியூகங்களுடன் தினகரன் மீண்டும் தமிழக அரசியலில் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 
 
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை ஒதுக்கி வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனி அணியாக செயல்பட ஆரம்பித்தனர். அதன் பின்னர் ஒதுங்கி இருந்த தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
 
மேலும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணியை இணைக்க கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் தான் அதிரடியை தொடங்க உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து தினகரனுக்கு இதுவரை 37 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
 
கடந்த 2 மாதங்களாக பெசண்ட் நகரில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் அதிரடி வியூகங்களை வகுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து கட்சியை கைப்பற்றி ஆட்சியை தனக்கு சதகமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
ஏற்கனவே தினகரன் பக்கம் 37 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு 15 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் வர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தன் பக்கம் உள்ள 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து முதற்கட்டமாக கட்சியை கைப்பற்றும் முயற்சியில் தினகரன் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :