திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (13:25 IST)

விஜயகாந்த்-டிடிவி தினகரன் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனையா?

விஜயகாந்த்-டிடிவி தினகரன் சந்திப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது
 
அதன்பின் சமீபத்தில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியுடன் இணைந்து என்பதும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிகவின் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்துள்ளார். இருவரும் வரும் தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்து ஆலோசித்ததாக தெரியவருகிறது 
 
மேலும் கடைசி 2 நாட்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு சில இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது