புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (23:26 IST)

டி.டி.வி. தினகரன் இரு கட்சிகளுடன் கூட்டணி...தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழகத்தில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்திலும் கூட்டணி கட்சிகளுடம் தொகுதிப் பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  தினகரனின் அமமுக கட்சி இன்று மருது செனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து இரு கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாள டிடிவி தினகரன்,  மருது சேனை சங்கம், கோகுல மக்கள் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதில் சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.