வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 ஜூன் 2016 (18:12 IST)

முஸ்லிம் எதிர்ப்பு அரிப்பை தீர்க்க பார்க்கிறாயா? - ஒய்.ஜி.மகேந்திரனுக்கு தடா ரஹிம் பதிலடி

கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பதிவு ஒன்றினை இட்டிருந்தார்.

ஒய்.ஜி. மகேந்திரனின் முகநூல் பதிவு கீழே:
 
ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.
 
இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்.
 
திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்.
 
என்ன செய்வது இறந்தது பிராமண பெண் இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்??? இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???”

என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
 
ஆனால், தான் அதனை பதிவிடவில்லை. வேறு ஒருவரின் பதிவினை பகிர்ந்திருந்தாகவும், அதே சமயம் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இந்த கருத்திற்கு இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்த அவரின் முகநூல் கீழே:
 
ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்த கருத்து ஃபேஸ்புக்கில் மிக பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
 
கொலை செய்யப்பட்ட ஸ்வாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை எனவும், இதுவே ஸ்வாதி ஒரு தலித்தாக இருந்திருந்தால் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருப்பார்கள் எனவும் அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு உள்ளது.
 
இதற்கு ஃபேஸ்புக்கில் கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஒய்.ஜி.மகேந்திரன் சொல்வது என்ன?
 
‘’அந்த ஃபேஸ்புக் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு” என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
 
மேலும், ‘’ராமதாஸ், கௌரவக் கொலை போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் போராடுகிறார். அவர்கள், ஸ்வாதி கொலையில் இன்னும் அழுத்தத்துடன் போராடியிருக்க வேண்டும்” என்கிறார்.
 
ஏண்டா கூத்தாடி லூசு, நான் பதியவில்லை; ஆனால் என்னுடைய கருத்தும் அதுதான். நான் ஷேர் செய்தேன். அட யாரை ஏமாற்ற இந்த விளையாட்டு நீ பதிவு போட்டு இருக்கின்றே? அந்த கருத்தும் என்னுடய கருத்தும் ஒன்று தான் எனும் போது போய் போலீஸ்லே சொல்லு முகநூல் பக்கத்தில் போட்டு முஸ்லிம் எதிர்ப்பு அரிப்பை தீர்க்க பார்க்கிரயா?
 
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.