வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2016 (17:34 IST)

சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதா புதிய ரூபாய் நோட்டுகள்?

மதுரையை சேர்ந்த அக்ரிகணேசன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


 

அதில் “இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 500, 1000 ருபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

இந்த2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர். ஹிந்தி மொழியில், எண்களுக்கு தேவ நாகரி எழுத்துக்களை பயன்படுத்துகின்றனர்.

மத்திய ஆட்சி மொழியாக ஹிந்தி இருந்தாலும், எண்களை பொறுத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். தேவநாகரி எண்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தில் சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும்.

ஆனால் அதுபோன்ற எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பு சட்டம், இந்திய ஆட்சி மொழிகள் அனுமதிக்காத ஒன்றான தேவநாகரி எழுத்துக்களை 2000 ரூபாய் நோட்டில் எண்களுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர ரிசர்வ் வங்கி வாரியத்தில் 5000, 10000 ரூபாய் நோட்டுகளை புதிதாக வெளியிட அனுமதி பெறப்பட்டபோது 2000 ரூபாய் வெளியிட அனுமதிபெற வில்லை” என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நேற்று திங்களன்று [21-11-16] இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் தேவ நாகரி எண்களை ரூபாய்நோட்டில் பயன்படுத்தினீர்கள் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.