வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:39 IST)

சசிகலாவின் நிலைக்கு தள்ளப்பட்ட தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக இன்று சென்னை அழைத்து வரப்பட்ட தினகரனை சந்திக்க யாருமே வரவில்லையாம்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக சிதறியது. ஓபிஎஸ் தரப்பு அணி சசிகலா அணியிடம் இருந்து சின்னம் மற்றும் கட்சியை கைப்பற்ற போராடி வருகின்றனர். 
 
நடக்க இருந்த இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் இரு அணிகளின் பிரச்சனைகளால் முடக்கப்பட்டது. இரட்டை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
கைதுச்செய்யப்பட்ட தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக இன்று தினகரன் சென்னை அழைத்து வரப்பட்டார். 
 
சென்னை வந்தடைந்த தினகரனை சந்திக்க கட்சி சார்பில் யாரும் வரவில்லையாம். இரண்டே இரண்டு அதிமுக நிர்வாகிகள் மட்டும் வந்து சந்தித்து உள்ளனர். தற்போது சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தினகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.