திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:30 IST)

தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை: கோட்டாட்சியர் உத்தரவு

dharumapuram
தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை: கோட்டாட்சியர் உத்தரவு
பொதுவாக ஆதீனங்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 மயிலாடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் வழக்கிற்கு தடை விதிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மனிதர்கள் பல்லக்கை தூக்கி செல்ல திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த உத்தரவு காரணமாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது