திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:30 IST)

தர்மபுரி மக்களுக்கு மேலும் இரு நற்செய்தி.. பாஜகவுக்கு வாக்கு கேட்கிறாரா திமுக எம்பி?

தர்மபுரி எம்பி செந்தில்குமார் அவர்கள் தர்மபுரி மக்களுக்கு இரு நற்செய்திகள் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த  நிலையில் அந்த பதிவை பார்த்த பலர் இவர் பாஜகவுக்கு வாக்கு கேட்கிறாரா என்று சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

தர்மபுரி எம்பி செந்தில்குமார் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

தர்மபுரி மக்களுக்கு மேலும் இரு நற்செய்தி.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடன்

மேலும் #இரண்டு புதிய #வந்தே_பாரத் ரயில்கள் தர்மபுரி வழியாக செல்லும்,

1) மதுரை- தர்மபுரி-பெங்களூரு வந்தே பாரத்

2) எர்ணாகுளம்-தர்மபுரி-பெங்களூரு வந்தே பாரத்

இந்த பதிவை பார்த்த பல வந்தே பாரத் ரயில் திட்டம் தற்போதைய  மத்திய அரசின் திட்டம்.  தற்போதைய மத்திய அரசு அறிவித்திருந்த திட்டத்தை நற்செய்தி என்று திமுக எம்பி கூறியது, அவர் பாஜகவுக்கு ஆதரவாக பதிவு செய்து நாரா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

மேலும் தர்மபுரி வழியாக இரண்டு வந்தே பாரத் செல்ல இருப்பதை எடுத்து பிரதமர் மோடி ஐயாவுக்கு  கோடி நன்றி என்று இந்த பதிவில் பல கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva