ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (15:24 IST)

தமிழக முதல்வரே : தனுஷ் ரசிகர்கள் அடாவடி

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 
நடிகர் தனுஷ் இன்று தனது 35வது நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து,  திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ‘தமிழக முதல்வரே’ என தனுஷை அழைத்து அவரின் ரசிகர்கள் சுவற்றில் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் புகைப்படங்கள் சிறியதாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
நடிகரும், தனுஷின் மாமனாருமான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இப்படி இருக்க, தமிழக முதல்வரே என தனுஷின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 
‘தமிழக முதல்வரே’ என பல வருடங்களாக அரசியல் கட்சியினை சேர்ந்த தொண்டர்களும்,  விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் ரசிகர்களும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் தனுஷும் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.