செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (23:24 IST)

மூன்று தலைமுறைகளை சார்ந்த திமுகவிலிருந்து விலகல்

மூன்று தலைமுறைகளை சார்ந்த திமுக வினர் இன்று செந்தில்பாலாஜியின் அலட்சிய செயலால் பாரம்பரிய மிக்க திமுக விலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகிறது.
 
மறைந்த முன்னாள் முதல்வரும், மறைந்த முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிடும் போது என் தந்தை தான் முன் மொழிந்தவர் ஆவார் அப்படி பட்ட திமுக பாரம்பரிய குடும்பமே இன்று அவரின் செயலால் வருந்தி அதிமுக வில் இணைகின்றோம்
 
நான் அமைதிப்படை சத்தியராஜ் போல திடீரென்று அரசியலுக்கு வந்தவன் அல்ல., செந்தில்பாலாஜியின் செயலால் திமுக வினருக்கு பெருத்த அவமானம்  அதனால் கட்சியிலிருந்தே விலகுகின்றேன் அதிமுக வில் இணைந்தவர் பரபரப்பு பேட்டி
 
திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழிற்சங்கத்தில் அகில இந்திய பொருளாளர் தொலைபேசி தொ.மு.க சாவில் இருப்பவர் கண்ணதாசன்., இந்தியாவில் 24 மாநிலத்தில் உள்ள அனைத்து சங்கங்களை சார்ந்த அகில இந்திய அளவிலான சங்கத்தில் பொருளாளராக இருந்து வருபவரும் ஆவார். 1986 லிருந்தே திமுக வில் உறுப்பினராக இருந்தவரும், இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோரும் திமுக இயக்க பற்றாளருமானர்களும் ஆவார்கள. மேலும், இவரது தந்தை மாரிமுத்து கடந்த 1957 ம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞர் கருணாநிதிக்கே தேர்தலில் முன் மொழிந்தவரும் ஆவார். பாரம்பரிய மிக்க திமுக கட்சியின் நிர்வாகியும் திமுக கட்சி பிரமுகருமான எனக்கு தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜியால் பெருத்த அவமானம் எனக்கு  மட்டுமல்ல, என்னை போன்ற திமுக வினர் அனைவருக்கும் தான், இதனிடையே கடந்த 4 ½ வருடங்களாக தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயலால் நாங்கள் (திமுகவினர்) ஈர்க்கப்பட்டு இன்று முதல் அதிமுக வில் இணைகின்றோம், கரூரில் மனிதர்களை மதிக்க தக்க அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் நான் இணைந்துள்ளேன், ஆகவே மக்களின் குறைகளை போக்குவதோடு, தண்ணீர் பஞ்சத்தினை போக்கும் பொருட்டு தனது சொந்த செலவில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கானாகத்திற்குள் கரூர் என்கின்ற திட்டத்தினையும் ஏற்படுத்தி செம்மையாக்கி வந்து வருகின்றார். மின்சாரம் தங்கு தடையின்றி தமிழகத்தில் கிடைத்து வருகின்றது. ஆகையால் அந்த ஆட்சியிலும் சரி அரசியல் இயக்கத்திலும் சரி என்னையும் என்னுடன் சேர்ந்த சுமார் 50 நபர்கள் இணைந்துள்ளோம் என்றார். நான் உண்மையாகவே திமுக கட்சிக்கு உழைத்து தற்போது அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றேன். அமைதிப்படை சத்தியராஜ் போன்று திடீரென்று அரசியலுக்கு வரவில்லை, என் குடும்பமே திராவிட முன்னேற்ற கழக குடும்பம், ஆகவே செந்தில்பாலாஜியின் செயலால் எங்கள் குடும்பமும் சரி, என்னை சேர்ந்தவர்களும் சரி, அந்த கட்சியிலிருந்து விலகுகின்றேன் என்றார்.